Monday, March 2, 2015

ஆம் ஆத்மியின் அதிகாரப் போட்டி

ஆம் ஆத்மி அதிகார ஆத்மி ஆகிவிட்டான். டெல்லியில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஆம் ஆத்மி நிர்வாகிகள் அதிகாரப் போதாமையுடன் மனச் சிக்கல் அடைந்துவிட்டார்கள். அதிகாரம் எங்கு குவிகிறது என்று லென்ஸ் வைத்துத் தேடத் துவங்கிவிட்டார்கள். அதிகாரம் பரவலாக்கப்பட்ட அரசியல் குவியம் உலகில் எங்குமே இல்லை. மனிதனின் அதிகாரக் குவியலைக் குறைக்க முடியாது. பேச்சால், எழுத்தால், நடிப்பால், நிர்வாகத்தால் அதிகாரம் குவிந்துவிடுகிறது. அதை ஓட்டை ஆக்க வேண்டும் என்றால் அமைப்பே ஓட்டை ஆகிவிடும். முன்பு ஜனதா கட்சி தலைவர்கள் ஜனநாயகத் தாகத்தில் தங்களைத் தாங்களே அதிகார ஓட்டையாளர்களாக ஆக்கிக்கொண்டது போல் ஆம் ஆத்மித் தலைவர்களும் ஆகக்கூடும். ஆனால் இவர்கள் அதிகாரப் போட்டி போட்டு, ஆட்சிக்கு வேட்டு வைத்துவிடுவார்கள் என்று உணர்ந்துதான் டெல்லி மக்கள் ஒரேயடியாக இடங்களை அள்ளிக் கொடுத்துவிட்டார்கள். சண்டைபோட்டு இரண்டு கட்சியானாலும் ஆட்சி நீடிக்கும். அர்விந்த் கெஜ்ரிவால் எனும் அதிகார மையத்தை அவ்வளவு சீக்கிரம் அசைத்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.